சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் ஜிகர்தண்டா-2 பட டீசர்!

டீசர் ரிலீஸ்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும், இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். மேலும், இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜிகர்தண்டா-2 படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts