ஜிகர்தண்டா- 2
சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில், ஜிகர்தண்டா- 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.