Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»இத்தாலிக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை அழித்த ஈரான்

இத்தாலிக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை அழித்த ஈரான்

March 17, 20262 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

குவைத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இத்தாலிக்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாக இத்தாலி தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 17-வது நாளாக தொடரும் போரால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் சரக்கு கப்பல்கள் மாற்று வழியில் செல்வதால் ஏற்றுமதி, இறக்குமதி செலவும் அதிகரித்துள்ளது. அத்துடன், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்கள், தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க :  ஹார்மூஸ் ஜலசந்தியில் கண்ணி வெடி வைக்க முயற்சி: 16 ஈரான் போர் கப்பல்கள் தகர்ப்பு

இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவ கூடாது என்று மற்ற நாடுகளை ஈரான் எச்சரித்திருந்தது. குவைத்தில் உள்ள அலி அல் சேலம் விமானப்படை (Ali Al Salem airbase) தளத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இத்தாலிக்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாகவும், யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் இத்தாலி ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரோமின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி (Antonio Tajani) கூறுகையில், “நாங்கள் யாருடனும் போரில் ஈடுபடவில்லை. இந்த வாரம் மத்திய கிழக்கில் உள்ள ஒரு இத்தாலிய தளத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் இது” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க தூதரக வசதியைக் கொண்ட பாக்தாக் விமான நிலையத்தில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க :  பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகை !

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளப்பதிவில், “அண்டை நாடுகள் அமெரிக்க படைகளை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பை உலக நாடுகளின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எந்த நாடும் உதவக் கூடாது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த, இத்தாலி ஆளில்லா விமானத்தைத் தாக்கி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆர்எஸ்எஸ், ரா உளவு அமைப்பை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும்: அமெரிக்க அமைப்பு பரிந்துரை
Next Article கான்வேயின் பேட்டிங், ஃபெர்குசனின் வேகம்: தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.