விளையாட்டு

ஐபிஎல் 2022 ; ஆர்சிபியின் கேப்டனாக தொடரும் கோலி? எக்ஸ்குளூசிவ் அப்டேட்ஸ்!

அக்கிரெஸ்சிவ் கேப்டன்

கடந்த ஒன்பது வருடங்களாக RCB அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தனி மனிதனாக நிறைய சாதனைகளை புரிந்தாலும் கேப்டனாக ஒருமுறைக்கூட ஐபிஎல் கப்பை வாங்க முடியாததால் ரசிகர்களாலும், முன்னாள் வீரர்களாலும் நிறைய விமர்சிக்கப்பட்டார்.

அக்கிரெஸ்சிவ் கேப்டனாக இந்திய அணிக்கு எத்தனையோ வெற்றியை பெற்றுத்தந்த கோலி 2021 ஐபிஎல் தொடரின் தோல்விக்கு பின்பு தானாகவே முன்வந்து RCB யின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

யார் அடுத்த கேப்டன்

இந்த நிலையில், வரும் மார்ச் 26 அன்று 2022 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. அனைத்து அணிகளும் தங்களது அணிக்கான கேப்டனை அறிவித்த நிலையில், RCB அணியின் கேப்டன் இதுவரை யார் என்று தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், கோலியின் விலகல் கடிதத்தை RCB நிர்வாகம் ஏற்கவில்லை. மீண்டும் கோலியே கேப்டனாக பொறுப்பேற்பார் என்றே செய்திகள் வெளியாகியுள்ளது.

RCB யின் வெற்றி வாய்ப்பு

டூப்ளிஸி, மேக்ஸ்வேல், கோலி போன்ற மேட்ச் வின்னர் பிலேயேர்கள் இவ்வருட அணியில் இடம்பிடித்துள்ளனர். ஒன்பது வருட போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2022 ஐபில் தொடர் RCB க்கு அமையுமா? கோலி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்பாரா? கேப்டனாகவும் ஜெயிக்கவேண்டும் என்ற கனவை நிஜமாக்குவாரா? என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் RCB ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related posts