சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறை
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று முதற்கட்டமாக நடத்தப்பட்ட ரெய்டில் சுமார் 15 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. மதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத தங்க நகைகள், தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

