Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»வெற்றி விழா கொண்டாடும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்: ஐஜேக தலைவர் பாரிவேந்தர்

வெற்றி விழா கொண்டாடும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்: ஐஜேக தலைவர் பாரிவேந்தர்

March 31, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பல்லாவரம் தொகுதியில் வெற்றி விழா கொண்டாடும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் என இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐஜேகே) தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக மட்டுமின்றி அக்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளும் பரப்புரைகளையும், பொதுக்கூட்டங்களையும் மும்முரமாக நடத்தி வருகின்றன.

அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியும் (ஐஜேகே) தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சிக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்லாவரம் தொகுதி ஐஜேகே வேட்பாளரான வழக்கறிஞர் வேங்கடேசனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வேட்பாளரை அறிமுகப்படுத்தி ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “​நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதே, அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்த முதல் ஆள் நான்தான். பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரை நான் அழைத்து வந்தேன். அன்று முதல் இன்று வரை பிரதமர் மோடி உடனான எனது நட்பு அப்படியே மாறாமல் தொடர்கிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட கோயம்புத்தூரில் பிரதமரை நான் சந்தித்தபோது, எனது உடல்நலனில் அவர் காட்டிய அக்கறை எங்களின் ஆழமான நட்பிற்குச் சான்று.

இதையும் படிக்க :  பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டுமான பணியை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு கிடக்கிறது. அர்த்தமற்ற வரி உயர்வால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். ஊழல் மலிந்துள்ள இந்த ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்திற்காக தவம் கிடக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த தேர்தல் மூலம் நிகழ வேண்டும். இதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது நீண்டகால நண்பர். எங்கள் ஊருக்கு மிக அருகாமையில் உள்ளவர். கல்வி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து சிந்திப்பவர். இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்திருப்பது வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழக மக்களின் விடியலுக்காக.

பல்லாவரம் தொகுதி கடந்த 50 ஆண்டுகளாக எங்களது பார்வையில் இருக்கும் தொகுதி. இங்குள்ள மக்கள் மீது எங்களுக்கு மிகுந்த அக்கறை உண்டு. இந்த அரங்கத்தில் உள்ள அனைவரையும் எனது உடன்பிறப்புகளாகவே கருதுகிறேன்.

தேர்தல் முடியும் வரை உங்கள் உழைப்பு ஓயக்கூடாது. உங்களுக்கு தெரிந்த அனைத்து தேர்தல் யுக்திகளையும் பயன்படுத்தி, இரட்டை இலை சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.​ தொண்டர்களாகிய உங்களின் வேகத்தையும், உணர்ச்சியையும் பார்க்கும்போது வெற்றி உறுதி எனத் தெரிகிறது. இதே பல்லாவரத்தில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் நமது வெற்றி விழாவைக் கொண்டாட நான் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என பாரிவேந்தர் கூறினார்.

இதையும் படிக்க :  44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி : 22 ஆயிரம் போலீசார் குவிப்பு !

பின்னர் பல்லாவரம் தொகுதி வேட்பாளர் வெங்கேடசன் பேசுகையில், “இந்த மண்ணின் மைந்தன் நான். இந்திய ஜனநாயக கட்சி ஆரம்பித்த நாள் முதல் அதில் பயணித்து வருகிறேன்.சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 28 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் எனக்கு, பல்லாவரம் தொகுதி புதியது அல்ல. நான் தாம்பரம் பல்லாவரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து உள்ளேன்.

தற்போது பல்லாவரம் பகுதியிலேயே எனது இல்லத்தை மாற்றிக் கொண்டு முழுநேர மக்கள் பணியில்,தேர்தல் பணியில் ஈடுபட உள்ளேன்.

பல்லாவரம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால், தொகுதிக்குத் தேவையான திட்டங்களையும் நிதி உதவிகளையும் எளிதாக பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்” என அவர் கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசெம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்
Next Article 30 சிலிண்டர்களுடன் டெலிவரி பாய் மாயம்; ஆந்திராவில் அரங்கேறிய விநோத திருட்டு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.