1918-ம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களால் தட்சின பாரத இந்தி பிரசார சபா அடையாரில் நிறுவப்பட்டது.1948-ல் இறக்கும் வரை காந்தியே தலைவராக இருந்தார். 1922-ல் பெரியார் காங்கிரஸில் இருந்தபோது ஈரோட்டில் தனக்கு சொந்தமான இடத்தில் இந்தி வகுப்பு நடத்தினர்.
14 ஜூலை 1937 அன்று ராஜாஜி சென்னை மாகாண முதல்வராக பதவியேற்றார். பதவிக்கு வந்தபின் ஒரு மாதத்திற்குள்ளாகவே 11 ஆகஸ்ட் 1937 கட்டாய இந்திக் கொள்கையை அறிவித்தார். 1938-ல் 125 உயர்நிலைப் பள்ளிகளில், இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்து அரசாணையை வெளியிட்டார்.
பதவிக்கு வரும் முன்னரே காங்கிரஸ் இந்தியை பயிற்றுவிக்கப் போவதாக தீவரப் பிரச்சாரம் செய்தனர். வென்றவுடன் இந்தி திணிப்பு கொள்கையை அமுல்படுத்த முயன்றனர். நான்கு மொழி பேசும் மாகாணத்தில் தமிழர்களும், தமிழ் தலைவர்களும் மட்டுமே தன்னெழுச்சியாக போராடினர்.
ஈழத்தில் சிவானந்த அடிகள், மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதியார் மற்றும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் தலைமையில் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது.
1939-ல் காவலர்களால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தமிழுக்காக சிலர் உயிர் மாய்ந்தனர். 1918,1948, 1963, 1968 காலங்களில் அதிதீவிரமாக இந்தி மொழி வன்மத்தோடு திணிக்கப்பட்டது.
2022 காலக்கட்டத்தில் கூட, காங்கிரஸ் ஆரம்பித்து வைத்த இந்தி திணிப்பை பிஜேபி சிறப்பாக செய்துவருகின்றது.
ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தி அமைவதற்கு இதுதான் சிறந்த காலக்கட்டம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியக் கருத்துக்கு எதிர்கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்களுக்கு இந்தி தெரியுமா?