Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கள்ளத் தொடர்பு- தட்டிக்கேட்ட கணவனை எரித்து கொன்ற மனைவி கைது

கள்ளத் தொடர்பு- தட்டிக்கேட்ட கணவனை எரித்து கொன்ற மனைவி கைது

March 14, 20262 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட கணவரை உயிரோடு எரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய ராஜன் மகன் அந்தோணி ராபின் (26). இவருடைய மனைவி அம்மு (22). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். அந்தோணி ராபின் தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், உடலில் பலத்த தீக் காயத்துடன் அந்தோணி ராபினை அவரது மனைவி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அப்போது அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறினார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அந்தோணி ராபின் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அந்தோணி ராபின் நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து அம்மு அளித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் தற்கொலை பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்தோணி ராபின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை மனைவி அம்மு தான் கொலை செய்திருக்க வேண்டும் எனவும், அவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி சேலத்தில் அவரின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க :  நெல்லை காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் - பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் அம்முவிடம் நடத்திய திடுக்கிப்பிடி விசாரணையில் அவரே தனது கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “சென்னை கூடுவாஞ்சேரியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தவர் அந்தோணி ராபின். அவருடைய கடையில் அம்மு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு உதவியாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு கூடுவாஞ்சேரி பகுதியிலேயே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அந்தோணி ராபின் – அம்மு தம்பதியினர் தங்களின் குழந்தைகளுடன், கள்ளக்குறிச்சி அருகே உள்ள க.மாமனந்தல் கிராமத்திற்கு வந்து வசித்து வந்தனர்.

இதையடுத்து அந்தோணி ராபின் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அம்முவுக்கும் அவருடைய சகோதரியின் கணவருக்கும் திருமண உறவை தாண்டிய பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட அந்தோணி ராபின் அம்முவை கண்டித்துள்ளார்.

இதையும் படிக்க :  விவசாயி கொலை: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை

இந்த நிலையில் கடந்த 8 தேதி வீட்டிற்கு மதுபோதையில் வந்த அந்தோணி ராபின் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அதில் ஆத்திரம் அடைந்த அம்மு வீட்டின் உள்ளே படுத்து தூங்கிய அந்தோணி ராபின் மீது பெட்ரோலை ஊற்றி அவரை எரிக்க முயற்சித்துள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட அந்தோணி ராபின் வீட்டிலிருந்து வெளியேறி சாலைக்கு ஓடி வந்துள்ளார். பின்னர் அவரை பின் தொடர்ந்து வந்த அம்மு அவர் மீது தீவைத்து எரித்துள்ளார். இதில் அவர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பொது, தனது கணவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அம்மு, கள்ளக்குறிச்சி போலீசில் தற்கொலை முயற்சி என புகார் அளித்துள்ளார். விசாரணையில் தானே தனது கணவரை தீ வைத்து எரித்ததாக அம்மு ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிரைவில் விடுதலையாகிறார் சோனம் வாங்சுக்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
Next Article விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 14 வயது பள்ளி சிறுவன் கொலை

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.