உலகின் மிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவை சேர்ந்த பெப்பல்ஸ் என்னும் நாய் பெற்றுள்ளது.
கின்னஸ் சாதனை
ஆண்டு தோறும் உலகில் சாதனை படைத்தவர்களின் பட்டியல் தான் இந்த கின்னஸ் சாதனை புத்தகம். 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நாய் இடம் பிடித்துள்ளது.
உயரமான நாய்
இந்த மாதம் தொடக்கத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெட்போர்ட்டில் வசிக்கும் இரண்டு வயாதான கிரெட் டேன் ரக நாய் தான் உலகின் மிக உயரமான நாய் என கின்னஸ் அறிவித்துள்ளது. சியஸ் என்று பெயரிடப்பட்ட இந்த நாயின் உயரம் 1.046 மீட்டர் அதாவது 3 அடி ஐந்து அங்குலமாகும். பொதுவாக கிரேட் டேன் ரக நாய்களிடம் வேட்டையாடும் தன்மை அதிகமாக இருக்கும். ஆனால், சியஸ்சோ எப்போதும் சாந்தமாகவே இருக்கும் என்கிறார் இந்த நாயின் உரிமையாளர்.
உலகின் மிக வயதான நாய்
தற்போது உலகின் மிக வயதான நாயை கின்னஸ் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த பாபி மற்றும் ஜூலி வளர்த்து வரும் நாய் பெப்பல்ஸ். பாக்ஸ் டெரியர் (Fox Terrier) ரக நாயான இந்த பெப்பல்ஸ்க்கு 22 வயது ஆகின்றதாம். இதனால் பெப்பல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நாய் உலகின் மிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.
20 ஆண்டுகள் அனுபவம்
முதல் முறையாக இவளை பார்த்தபோதே மிகவும் பிடித்துவிட்டது. 20 ஆண்டுகளில் பல மகிழ்ச்சியையும், சில துக்கங்களையும் எங்கள் நாய் கண்டுள்ளது என்று இந்த நாயின் உரிமையாளர்கள் உணர்வுபுர்வமான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஆண்டு தோறும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற மனிதர்கள் பல வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், செல்லப்பிராணிகள் கின்னஸ் சாதனையில் இடம் பெற்று வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.