சினிமா

FIR ரை மிஞ்சும் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் .. அடுத்தடுத்து அதிரடிக்காட்டும் விஷ்ணு விஷால்!

தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடிக்குழு, முண்டாசுப்பட்டி, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களால் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறியப்பட்டவர் விஷ்ணு விஷால்.

சமீபத்தில் வெளியாகிய FIR திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.கதையும், கதாபாத்திரங்களும் ரசிக்கும் வகையில் இப்படத்தில் வடிவமைக்கப்பட்டுட்டிருந்தன.

ஒரு சாதாரண வாழ்க்கையைக் கொண்ட ஒரு அப்பாவி மனிதரான இர்பான், ஊடக சோதனைகளால் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுகிறார். பயங்கரவாதி என  குற்றம் சாட்டப்பட்ட ஒரு மனிதருக்கு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சாத்தியம் இருக்கிறதா? இச்சமூகம் அந்நபரை எப்படி அணுகுகிறது, அந்நபரின் சமூக வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது தான் இப்படத்தின் கதை.

இத்திரைப்படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளத் திரைப்படம் மோகன்தாஸ்.

மோகன்தாஸ் படத்தியின் ட்ரைலர் இணையத்தில் 1 மில்லியனை கடந்து சென்றுள்ளது. இப்படம் க்ரைம் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக கருதப்படும் நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இவர் நடிப்பில் அமோக வெற்றியடைந்தப்  படமாக ராட்சசன் கருதப்படுகிறது. இப்படமும் க்ரைம் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கட்டா குஸ்தி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளிவரவுள்ளது. மேலும், கட்டா குஸ்தி திரைப்படத்தின் செட் பிக் ஒன்றை விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts