Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, September 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து – 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து – 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

March 15, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கரூர் மாவட்டம், ஜல்லிப்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் சரக்கு ரயில் மோதியதில் காயமடைந்த 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் பரமத்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து, நேற்று மாலை 6 மணி அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த கல்லூரியின் பேருந்து வெள்ளியணை வழியாக ஜல்லிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜல்லிப்பட்டி அருகே தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆளில்லா ரயில்வே கிராசிங்கை பேருந்து கடக்க முயன்றது. அப்போது, சிமெண்ட் ஆலையில் இருந்து லோடு ஏற்றி வந்த சரக்கு ரயில், அந்த பேருந்தின் பின்பக்கமாக பலமாக மோதியது.

இந்த விபத்தில், பேருந்து கடுமையாக சேதமடைந்ததுடன், பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உட்பட 25 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல் துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டு, காயமடைந்த மாணவ, மாணவிகளை கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்க :  சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தஞ்சாவூரை சேர்ந்த நபர் கைது

இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் உடனடியாக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்த மாணவ, மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுடன் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த விபத்து தொடர்பாக, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான ரயில்வே கிராசிங்கின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க :  செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் DNA சோதனையில் உறுதி

முதல்கட்ட விசாரணையில், தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான சரக்கு ரயிலை இயக்கிய ஓட்டுநர், ஆளில்லாத ரயில்வே கிராசிங் அருகே வந்தபோது சிக்னல் கொடுத்தபோதும் தனியார் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் விரைவாக கடக்க முற்பட்டதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளியணை போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை விரைவில் கைது செய்து, நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமுதல் பெண் உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்
Next Article மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அன்னதானத் திட்டத்தில் மாற்றம்… இனி காலை, மாலை சிற்றுண்டி உண்டு

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,170 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,170 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.