சினிமாவெள்ளித்திரை

மாமன்னன் படப்பிடிப்பில் திரண்ட ரசிகர்கள்!

மாமன்னன் படபிடிப்பு

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றியடைந்து. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

Related posts