பரபரப்பு கருத்து
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. அதேபோல் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் திரையரங்குகளை சரிபாதியாக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு முன்னணி நடிகர்களான விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ‘துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறித்து நடிகர் விஜய்யிடம் கூறியதாகவும், ‘அதற்கு வரட்டும் பா. நம்ம நண்பர் படம்தானே. அதுவும் நல்லா போகட்டும்’ என்று விஜய் கூறியதாக நடிகர் ஷியாம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜய்யின் இந்த கருத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

