கேரளத்தில் நீட் தேர்வு சர்ச்சையில் சிக்கிய மாணவிகளுக்கு மீண்டும் செப்டம்பர் 4ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தேர்வு குழு அறிவித்துள்ளது.
நீட் தேர்வு சர்ச்சை
கடந்த மாதம் 17ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது, ஆடைகளை சோதனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விவகாரத்தில் கொல்லத்தில் 6 இடங்களில் மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4ல் மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ல் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் கேரளாவில் 6 இடங்களில் மறுதேர்வு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.