சினிமாவெள்ளித்திரை

அருண் விஜய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ரிலீஸ் தேதி

குற்றம் 23, தமிழ் ராக்கர்ஸ், படங்களை தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இத்திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனிடையே இந்த படத்தை படத்தை ஓடிடியில் வெளியிடவும் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், பார்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Related posts