கல்வி

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சர்ப்ரைஸ் !

கொளுத்தும் கோடை வெயினால் தவிக்கும் மாணவர்கள். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்துகிறது.

கொரோனா தாக்கம்

மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இணைய வழி கல்வி நடைமுறையில் இருந்தது. தற்போது நோய்த்தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த நேரமில்லாமையால் கோடை காலத்திலும் தொடர் நேரடி வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.. வெயிலில் பயணிப்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

100 டிகிரியை தாண்டிய வெப்பநிலை

தமிழ்நாட்டில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைக்கிறது. இதனால் பொது தேர்வு நடைபெறும் 10,11,12 மாணவர்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையை விரைவில் அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை விடுமுறை

பெரியவர்களாலேயே வெப்பத்தை தாங்க முடியாத நிலையில் மாணவர்களின் நலன் கருதி முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை. ‘வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது. மாணவர்களுக்கு, சாதகமான செய்தி விரைவில் வந்து சேரும்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.