பதவி வேண்டாம் அதிகாரம் வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் சுமார் 37 ஆண்டுகள் கடந்தும் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று அன்புமணி உணர்ச்சி பொங்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.
மாநில பொதுக்குழு கூட்டம்
விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பாமகவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். மற்றும் பாமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜீ .கே மணி, சட்டமன்ற உறுப்பினர் சிவா குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாமக – வினர் கலந்து கொண்டனர்.

பதவி ஆசை இல்லை
அன்பு மணி ராமதாஸ் அவர்கள் பேசுகையில் : எந்த கட்சிகளிலும் இல்லாத அளவிற்கு பாமகவில் இளைஞர்கள் இருப்பதாக கூறினார். இப்போது அரசியல் களம் மாறியுள்ளது . வியாபாரிகளும், பொதுமக்களும் பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பது வருத்தமாகவுள்ளது. நான் 35 வயதிலேயே மத்திய அமைச்சர் ஆகிவிட்டான் எனக்கு பதவி ஆசையெல்லாம் இல்லை, நமது கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். அனைத்து கிராமகளிலும் நமது பாமக கொடி பறக்க வேண்டும்.

10.5 இடஒதிக்கீடு
10.5 விழுக்காடு இடஒதிக்கீடு என்பது வன்னியர்களுக்கு மிக குறைவு. தமிழகத்தில் சாதி ரீதியான கணக்கு எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். மதுவால் தமிழ்நாட்டில் பள்ளி மாணவ மாணவிகள் சீரழிந்து வருகின்றனர்.
காவல்துறை
தமிழகத்தில் காவல் துறைக்கு தெரியாமல் போதை பொருட்களை யாராலும் விற்க முடியாது. காவல் துறை நினைத்தால் எல்லாவற்றையும் ஒழித்துவிடலாம். லாக்கப் மரணங்களை தடுக்கும் விதமாக காவல் நிலையங்கள் உள்ளேயும் வெளியேவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட வேண்டும்.

ஆளுநரும், தமிழக அரசும் முதன்மை பிரதிநிதிகளாகவும், ரயில் தண்டவாளம் போல் இணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டின் மக்கள் மற்றும் நாட்டின் முனேற்றத்திற்கு பாடுபடவேண்டும். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்’ இவ்வாறு பேசினார்.
