சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியில் இருந்து 3000 உறுப்பினர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி மு க கட்சியில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
புதியதாக இணைந்த உறுப்பினர்களை முதல்வர் அவர்கள், வரவேற்று வாழ்த்தி பேசியதாவது; ‘தமிழக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பது திமுக தான். திமுக தான் விடி வெள்ளி, உற்ற தோழன், நம்மை காக்கும் பேரியக்கம் என்று நம்பிக்கையோடு இணைய வந்திருக்கிறீர்கள்.
திமுக ஆட்சி வரலாறு
திமுக 73 ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடபட உள்ளது. 1949 ஆம் ஆண்டு கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் திமுக தொடங்கப்பட்டது. தொடங்கிய உடனே தேர்தலை சந்திக்க முடியவில்லை என்றாலும் 1957-இல் திமுக முதன் முதலாக தேர்தல் களத்தில் கால் பதித்து, 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 50 கும் மேற்பட்ட இடங்களில் வென்று எதிர்கட்சியானது.
உங்களில் ஒருவனாக !
1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 1971 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தோம். 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையாருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டதால் நாடு முழுவதும் நெருக்கடி நிலைமை அமல்படுத்தப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 13 ஆண்டுகள் கழிந்து 1989 ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 1991 இல் தோல்வி; 1996 இல் வென்று ஆட்சி அமைத்தோம். 2001 இல் தோல்வி; 2006 இல் வென்று ஆட்சி அமைத்தோம். 2011 க்கு பிறகு கடந்த தேர்தலில் வென்று உங்களில் ஒருவனாக இருக்க கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நடைபெறுகிறது.
இந்த ஆட்சி தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தான்
திமுக ஆட்சி அமைத்து பதவிகளை வழங்கியிருப்பது சொகுசுக்காக அல்ல மக்களுக்கு தொண்டாற்ற. ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வாதாடலாம். தற்போதைய திமுக ஆட்சியில் தமிழருக்கே என உறுதியளிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளில் தமிழ்மொழி தகுதி தேர்வாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் தாய்மொழியான தமிழ் ஒலிக்க தொடங்கியுள்ளது. மாவட்ட அரசு ஊழியர்கள் தமிழ் மொழியில் கையெழுத்து போட்டாகும் நிலை உருவாக்கப்ட்டுள்ளது.
ஈழத்தமிழருக்கு உதவி
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழருக்கென ரூ.317 கோடி பாதுகாப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் மறு வாழ்விற்காக 13 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு உதவ மத்திய அரசு அனுமதி தந்துள்ள நிலையில் 10 அல்லது 25 ஆண்டுகள் நாம் ஆட்சியில் இருந்தால் என்ன செய்திருப்போமோ அதை ஓராண்டுக்குள் செய்திருக்கிறோம்’. இவ்வாறாக ஸ்டாலின் கூறினார்.