Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»செல்வப்பெருந்தகை காங்கிரஸை வளர்க்காமல் திமுகவை தாங்கிப் பிடிக்கிறார் – எடப்பாடி பழனிசாமி

செல்வப்பெருந்தகை காங்கிரஸை வளர்க்காமல் திமுகவை தாங்கிப் பிடிக்கிறார் – எடப்பாடி பழனிசாமி

September 24, 20252 Mins Read49 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நீலகிரி மாவட்டத்தின் கூடலூரில், இன்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக நடந்த இந்தக் கூட்டத்தில், எடப்பாடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை யாரும் அடிமையாக்க முடியாது. எங்கள் தொண்டர்களை எவராலும் பணிய வைக்க முடியாது. தேர்தல் களத்தில் அதிமுக முதலிடத்தில் உள்ளது, இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி நடக்கிறது,” என்று கூறி, கட்சியின் வலிமையை வெளிப்படுத்தினார்.

மேலும் தொடர்ந்து பேசிய எடப்பாடி, திமுகவின் ஆட்சியை “குடும்ப ஆட்சி” என்று கடுமையாக விமர்சித்தார்.

திமுகவில் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை புகழ்கிறார், உதயநிதி தனது தந்தையை புகழ்கிறார். இதுதான் குடும்ப ஆட்சி. அவர்களுடைய குடும்பத்தை தவிர திமுகவை யாரும் புகழ்ந்து பேசமாட்டார்கள்.

இதையும் படிக்க :  தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

கடன் வாங்குவது, ஊழல், டாஸ்மாக்கில் ரூ.10 வாங்குவது, பொய் வாக்குறுதிகள் கொடுப்பது ஆகியவற்றில் திமுகவே முன்மாதிரி, என்று கூறினார்.

மேலும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியது அம்மாவின் ஆட்சி. ஆனால், திறமையற்ற பொம்மை முதல்வர் ஆளும் திமுகவால் எந்தப் புதிய திட்டமும் இல்லை. ஊட்டியில் அதிமுக தொடங்கிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவிட்டது,” என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையையும் எடப்பாடி விமர்சித்தார். யாசகம் கேட்பவர் சட்டையில் ஓட்டையை மறைப்பதற்கு ஒட்டு வைப்பது போல், செல்வப்பெருந்தகை காங்கிரஸை வளர்க்காமல் திமுகவை தாங்கிப் பிடிக்கிறார்.

காங்கிரஸுக்கு விசுவாசமாக இல்லாமல், திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார், என்று கூறினார்.

இதையும் படிக்க :  காகித ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மேலும், திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது. ஆனால், அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு. 8 கோடி மக்களை ஒரு குடும்பம் சுரண்டுவதை அனுமதிக்க முடியாது,” என்று திமுகவின் கூட்டணி அரசியலை சாடினார்.

அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்ட எடப்பாடி, “கூடலூரில் ஏழை, எளிய மலை கிராம மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க, அதிமுக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியது.

2019-2020ல் உயர்கல்வி சேர்க்கையில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து அதிமுக சாதனை படைத்தது.

ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தொடங்கியது எங்கள் ஆட்சி. ஆனால், திமுக 4 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட கொண்டுவரவில்லை, என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

aiadmk congress dmk Edappadi Palanisami selvaperunthagai
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை CBI விசாரணைக்கு மாற்றம்
Next Article நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவிற்கு ஜப்தி நோட்டீஸ்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.