சினிமாவெள்ளித்திரை

விஜயுடன் இணையும் இயக்குனர் கவுதம் மேனன்!

தளபதி 67

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் இணைந்து பணியாற்றுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜுன், கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts