Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, April 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»சர்ச்சை பேச்சு வழக்கு – மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு உத்தரவு

சர்ச்சை பேச்சு வழக்கு – மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு உத்தரவு

March 24, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பெண்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, வரும் மே மாதம் 12-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது.

மேலும், பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து தாமாக முன் வந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொன்முடி மீது காவல் துறை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பி இருந்தது. தமிழகம் முழுவதும் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட 214 புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என பதில் அளிக்குமாறு காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க :  டெல்லியில் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு !

அதற்கு காவல்துறை தரப்பில், விசாரணை முழுமையாக நடத்தப்பட்டதாகவும், புகாரில் முகாந்திரம் இல்லாததால் 214 புகார்களும் முடித்து வைக்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், தனிநபர்கள், நடுவர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையும் படிக்க :  “பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை, ஆனால்...” - டிடிவி தினகரன் விவரிப்பு

இந்த புகார் மனு, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, முன்னாள் அமைச்சர் பொன்முடி மார்ச் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி. சுந்தரபாண்டியன் முன்பு இன்று (மார்ச் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிலுவையில் இருப்பதால் நேரில் அவர் ஆஜராகவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, பொன்முடி, வரும் மே மாதம் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிசிக தனித்துப் போட்டி… திருமாவளவன் அறிவிப்பு.. புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
Next Article கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு… தொடவே கூடாத 7 உணவுகள்!

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.