நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது குறைகளை தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
வெள்ள அபாயம்
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு சுமார் 1,80,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி கரையோரமுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் சுமார் 800 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் தங்களது வீடுகளை இழந்த மக்களை வருவாய்த்துறையினர் தனியார் முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
முதல்வர் ஆய்வு
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம், அவர்களது குறைகளை தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று தற்போது மேட்டூர் அணையிலிருந்து காவேரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்தும்
1/2 pic.twitter.com/Sxowl2TJAD
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 5, 2022

