தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் புதிய படத்தின் போஸ்ட்டரை நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்.
லோக்கல் சரக்கு
யோகி பாபு தற்போது ‘மெடிக்கல் மிராக்கல்’, ‘பூமர் அங்கிள்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு குப்பைக் கதை படத்தை தொடர்ந்து நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர், யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் இந்த படத்திற்கு ‘லோக்கல் சரக்கு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை ‘அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
Here is the Tittle & First Look Of Actor / Dance Master @immasterdinesh & Actor @iYogiBabu #LOKALSARAKKU Directed By #SPRajKumar & Produced By #VRSuwaminathan & #Rajesh #DISCOVERSTUDIOS pic.twitter.com/MNJhFLCM0K
— Actor Soori (@sooriofficial) July 30, 2022

