தமிழ்நாடு

விக்னேஷ் சிறை மரணம் – விலகும் மர்மங்கள்

சென்னையில், 25 வயதுள்ள விக்னேஷ் மெரினா கடற்கரையில் வாடகைக்கு குதிரை சவாரி ஒட்டி வருகிறார். அவரை தலைமை செயலக காவல் குடியிருப்பு நிலைய போலீசார் போதை பொருள் வைத்திருப்பதாக சந்தேகத்தின் பெயரில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பன் சுரேசையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது விக்னேஷை போலீசார் மிக கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இருவரையும் சிறையில் அடைந்துள்ளனர்.

சிறையில் மரணம்

காலையில், விக்னேஷ் உடல்நிலை சரியில்லாதால் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் விக்னேஷ் இறந்து விட்டதாக கூறினார்.

அதன் பின்பு விக்னேஷின் பெற்றோருக்கு தகவல் சொல்லப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த விக்னேஷின் பெற்றோர்களும் உறவினரும் விக்னேஷின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என போராட்டம் நடத்தினர்.போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு விக்னேஷின் உடலை வாங்கிக்கொண்டனர்.

அதன்பிறகு கிருஷ்ணபேட்டை மையனத்தில் விக்னேஷின் உடல் புதைக்கபட்டுள்ளது. விக்னேஷின் பெற்றோரிட்டம் ஒரு லட்சம் ரூபாய் இறப்பு செலவுக்காக போலீசாரால் கொடுக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

விக்னேஷின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் விக்னேஷின் உடலை மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டனர்.

 உடற் கூராய்வு அறிக்கை

விக்னேஷின் உடற் கூராய்வு அறிக்கை இந்த வழக்கில் மிக பெரிய திருப்பத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. அதில் உடலில் 13 இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலையில் 1 செ.மீ ஆழமான துளை இருப்பதாகவும், இரத்தக்கட்டு, உடலில் அதிக்க சிராய்ப்பு காயங்கள் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுயுள்ளது தெரியவந்துள்ளது.

காவல் நிலையத்தில் காலையில் விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இவர் மதியம் 1:30 மணிக்கு இறந்தார் என அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஆகியுள்ளது.

சிபிசிஐடி டு சிபிஐ

இவ்வழக்கு முதல்வர் தரப்பில் சிபிசிஐடி மாற்றி மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்படும் என சட்டமன்றத்தில் கூறினார். இதனை எதிர்த்து சட்டமன்றத்தில் எதிர் கட்சிகள் சிபிசிஐடி விசாரணையில் நேர்மை இருக்காது என வழக்கை மத்திய புலனாய்வு துறைக்கு (CBI) மாற்ற வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற சொல்லி சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து வெளியேறினர்.

Related posts