தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை ஒரே மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி, திருநெல்வேலியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். அடுத்து வரும் ஞாயிறு, மற்றும் திங்கட்கிழமைகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று வரை தமிழகத்தில், ‘மேல் பவானி, அவலாஞ்சி 32 செ.மீ, கூடலூர் பஜார் 17 செ.மீ, மேல் கூடலூர் 16 செ.மீ, சோலையாறு 13 செ.மீ, வால்பாறை தலா 11 செ.மீ, தேவாலா தலா 10 செ.மீ. உள்பட சில இடங்களில் கன முதல் மிதமான மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

