அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு அபராதம் விதித்த வணிக வரித்துறைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொகுசு கார்
கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63,00,000 ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதற்கு பிறகு விஜய் தரப்பில் 7,98075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. இருப்பினும் வரி செலுத்த தாமதமானதாக கூறி 30,23,609 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களும் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 2019ம் ஆணுக்கு முன்னர் முழு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. மேலும், 2019ம் ஆண்டுக்கு பிறகு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

