சென்னை தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தினம்
வரும் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மாநகராட்சி சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பெயரில், மறுநாள் பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வௌிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

