சமூகம்தமிழ்நாடு

Investors conference 2022: முதல்வர் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து !

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைப்பெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைப்பெறும் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். மாநாட்டில் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 22,252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17,654 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 21 நிறுவனங்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், பணிகள் நிறைவடைந்துள்ள ரூ.1,497 கோடி மதிப்பீட்டில் 7,050 பேருக்கு வேலைவாய்ப்பளிக்ககூடிய 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி & மேம்பாட்டுக் கொள்கை 2022ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Related posts