அரசியல்தமிழ்நாடு

“தனி தமிழ்நாடு கேட்க வைத்துவிடாதீர்கள்”..! மோடி, அமித் ஷாவிடம் – பணிவுடன் கோரிக்கை வைத்த ஆ.ராசா !

நாமக்கல் கூட்டத்தில் தனி தமிழ்நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் மோடி மற்றும் அமித் ஷாவிடம் பணிவுடன் கோரிக்கை வைத்த ஆ.ராசா.

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு

நாமக்கல்லில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ எனும் தலைப்பில் பேசினார். அப்போது அவர், முதலில் கூட்டாட்சிக்கு ஒப்புக்கொண்ட நேரு , பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

தனி தமிழ்நாடு கோரிக்கை

ஆனால் எங்கள் பெரியார் இறுதிவரை தனி தமிழ்நாடு கோரிக்கை வைத்தார். அவரை பின்பற்றிய அண்ணாவும், கலைஞரும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக பெரியரையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று நாங்கள்  சொன்னோம். நான் பிரதமருக்கு, அமித் ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்’ என நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டில் பேசினார்.

Related posts