ஜோமாட்டோ ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பிய நபர். மேலும், ஜோமாட்டோ ஊழியர் பட்டியலினத்தவர் என்பதால் உணவு வாங்க மறுத்துள்ளனர்.
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் வினித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோமாட்டோ நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் ஜோமாட்டோ வேலை செய்வதால் லக்னோவின் அனைத்து பகுதிகளிலும் உணவு டெலிவரிக்கு செல்வது வழக்கம்.
உணவு வாங்க மறுப்பு
லக்னோ பகுதியில் வசிக்க கூடிய நபர் ஒருவர் ஜோமாட்டோ ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் வினித் குமாருக்கு வந்துள்ளது. வினித் குமாரும் உணவை உணவகத்தில் இருந்து வாங்கிக்கொண்டு ஆர்டர் செய்தவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
உணவை ஆர்டர் செய்த அந்த நபர் வீட்டுக்கு வினித் குமார் சென்றுள்ளார். அப்போது அந்த நபர் வினித் குமாரை குறித்து சில கேள்விகளை கேட்டுள்ளார். உன் பெயர் என்ன, ஜாதி என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு வினித் தனது ஜாதியை சொல்ல மறுத்துவிட்டார்.
இருப்பினும் அந்த நபர் வினித் குமார் பட்டியலினத்தவர் சேர்ந்தவர் என்று சொல்லி உணவை வாங்க மறுத்துவிட்டார். மேலும், உணவை திருப்பி எடுத்து செல்லுமாறு வினித் குமாரை மிரட்டியுள்ளார்.
ஜாதி வன்கொடுமை
உணவை வாங்க மறுத்தால் அந்த நபரிடம் ஆர்டரை ரத்து செய்யும்படி வினித் குமார் கூறியுள்ளார். ஆனால் அந்த நபரோ ஆர்டரை ரத்து செய்ய மறுத்துள்ளார். மேலும், அந்த நபர் வினித் குமாரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். அதுமட்டுமின் சில நபர்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து வினித் குமாரை தாக்கியுள்ளார். இதில் வினித் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.வினித் குமாரின் பைக்கையும் அவர்கள் வாங்கி வைத்துள்ளனர்.
புகார்
இதுகுறித்து வினித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அந்த நபர்களிடம் வினித் குமாரின் பைக்கை திரும்ப பெற்றுகொடுத்தனர். மேலும் போலீசார் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டதிற்கு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் ஜாதி பாகுபாடு பார்த்து உணவு வாங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.