தமிழகத்தில் காலியாக உள்ள உரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது.
உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழகத்தில் உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்புவதற்காக தமிழக தேர்தல் ஆணையம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று 7 காலை மணிக்கு தொடங்கி இடைத்தேர்தல் நடைபெற்று வருகின்றது. காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று மாலை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்தனர். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெறும். மேலும், வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

