ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் குலு குலு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ரத்னகுமார்
2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். மேயாத மான் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஆடை என்ற படத்தை ரத்னகுமார் இயக்கினார். அதனைத்தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருந்தார்.
ரிலீஸ் தேதி
இதனையடுத்து ரத்னகுமார் குலு குலு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடித்துள்ளார். நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதன்பெயரில் குலு குலு படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

