தனித் தமிழ்நாடு சாத்தியம் இல்லை என திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் எம்.பி கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர் எம்.பி
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு மேஜை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ‘தவறு செய்தால் கட்டாயமாக தண்டனை அனுபவிக்க வேண்டும். திமுகவின் ஆக்சிஜனால் தான் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிமுக ஆக்சிஜனில் தான் பாஜக செயல்பட்டு வருகிறது என்பதை முதலில் அவர் ஒப்புக்கொண்ட பிறகு மற்றவர்களை விமர்சனம் செய்யலாம் என கூறினார். மேலும், தமிழ்நாட்டை தனித் தமிழ் நாடாக பிரிப்பது சாத்தியமில்லை, அது இந்தியாவின் ஒற்றுமையை சீர்கொலைத்துவிடும். இளையராஜாவிற்கு எம்.பி பதவி கொடுத்ததற்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

