கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்வர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோப்ரா படம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் கோப்ரா. தற்போது இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து திரைக்கு வரவிருக்கிறது. இதன்பெயரில் கோப்ரா ஆகஸ்ட்11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கும் நிலையில் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 11ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
நடிகர் விக்ரம்
இந்நிலையில், நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்தது விக்ரம் லேசான நெஞ்சுவலி காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இதனால் நடிகர் விக்ரம் வரும் கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே தற்போது கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

