Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»உ.பி.யில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர், நர்ஸ் கைது – தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்

உ.பி.யில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர், நர்ஸ் கைது – தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்

February 16, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு பி.ஏ பட்டதாரியும், ப்ளஸ் டூ மாணவியும் இணைந்து பிரசவ அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்தப் பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தப் பின் வெளியான செய்தியால் இருவரும் கைதாகியுள்ளனர்.

உ.பி.யின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ளது பஸ்கரி பகுதி. இங்கு நவ்ஜீவன் எனும் தனியார் மருத்துவமனையை ரூபி என்பவர் நடத்தி வந்துள்ளார். இதில் பிரியங்கா என்ற பெண்ணுக்கு கடந்த வாரம் பிரசவம் பார்க்கப்பட்டது.

இந்த பிரசவத்தின் அறுவை சிகிச்சையை பி.ஏ பட்டதாரியான யோகேஷ் (32) நடத்தி உள்ளார். தன்னை மருத்துவர் எனக் கூறிக் கொண்டவருடன் ப்ளஸ் டூ பயின்றவரான சுபம் விஸ்வகர்மா (19) செவிலியராக இருந்துள்ளார். அதில் இளம்பெண்ணானப் பிரியங்கா தனது குழந்தையுடன் பரிதாபமாகப் பலியாகி உள்ளார். இதன் மீது பெண்ணின் கணவர் சந்தீப் செய்த புகாரை அடுத்து வழக்குப் பதிவாகி விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து உடனடியாக விசாரணையை துவக்கிய போலீஸார் நவ்ஜீவன் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். அந்த மருத்துவமனை, எந்த விதமானப் பதிவும் இல்லாமல் துவக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க :  அரைசதம் விளாசிய பாகிஸ்தானின் ஃபர்ஹான் அதை அவர் கொண்டாடிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

போலி மருத்துவரும், செவிலியருமான மாலிபூரைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் சுல்தான்பூரைச் சேர்ந்த சுபம் விஸ்வகர்மா ஆகியோர் பஸ்கரி பஜாரில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யோகேஷின் தந்தை பகவன்தாஸ் ஜலால்பூர் அரசு பொதுநல சுகாதார மையத்தில் வார்டு பாய் பணியில் இருந்துள்ளார். அவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

தந்தையுடன் வசிக்கும் போது, மகன் யோகேஷ் அங்குவரும் நோயாளிகள் சிகிச்சைகளைப் பார்த்து அதை கற்கத் துவங்கி உள்ளார். அறுவை சிகிச்சைகளையும் பார்த்து அறிந்தவர், தன்னை மருத்துவர் எனக் கூறத் துவங்கியுள்ளார். போலி சான்றிதழ்களுடன் பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் அவர் பணியாற்றி உள்ளார்.

சுபமின் தந்தையான விஜய் விஸ்வகர்மா, அருகிலுள்ள சுல்தான்பூரில் பெல்வாய் அகண்ட் நகரில் தனியாக பஜ்ரங்கி நர்சிங் ஹோமை நடத்துகிறார். இங்கு தான் யோகேஷ் அறுவை சிகிச்சைகளைப் பார்த்து அவற்றை செய்யத் துவங்கி உள்ளார். விஜயின் மகள் சுபம் விஸ்கர்மாவை தனது உதவியாளராக வைத்து நவ்ஜீவன் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்தவர் சிக்கியுள்ளார்.

இதையும் படிக்க :  பெரியபாளையம் அருகே ரவுடி கொலை! 4 பேர் கைது

இதனிடையே, அம்பேத்கர் நகரின் அக்பர்பூர், ஜலால்பூர், பஸ்கரி மற்றும் ஜஹங்கீர்கன்ஞ் பகுதியின் தனியார் மருத்துவமனை பிரசவங்களில் இறக்கும் தாய், சேய் எண்ணிக்கை அதிகரிப்பதாகப் புகார் எழுந்தது.

இதன் மீது மாவட்ட ஆட்சியர் அனுபம் சுக்லா மாவட்ட தலைமை மருத்துவர் டாக்டர் சஞ்சய் குமார் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை கடந்த வருடம் ஏப்ரலில் அமைத்து விசாரணை நடத்தினார். ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்ட இதன் அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளைப் போலவே, அரசு மருத்துமனைகளின் பிரசவ அறுவை சிகிச்சைகளிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அறிக்கை அளித்திருந்தது.

இதையடுத்து அனைத்து தனியார் மருத்துவமனை மற்றும் அவற்றில் பணியாற்றும் மருத்துவர்களின் பதிவு, சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதன் விசாரணையில், நவ்ஜீவன் மருத்துவமனை எப்படியோ சிக்காமல் தப்பி இருந்துள்ளது. தலைமறைவாகி விட்ட இதன் உரிமையாளர் ரூபியை அம்பேத்கர் நகர் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleரூ.12-ல் இருந்து ரூ.15,000 கோடி சாம்ராஜ்யம்… ஊழியர்களுக்கு கார், வீடு பரிசளிக்கும் ‘வைர ராஜா’
Next Article “இலங்கை நீதிமன்றம் விடுவித்த பிறகும் 9 தமிழக மீனவர்களை மீட்கவில்லை” – சீமான் கண்டனம்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.