Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, August 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»“இலங்கை நீதிமன்றம் விடுவித்த பிறகும் 9 தமிழக மீனவர்களை மீட்கவில்லை” – சீமான் கண்டனம்

“இலங்கை நீதிமன்றம் விடுவித்த பிறகும் 9 தமிழக மீனவர்களை மீட்கவில்லை” – சீமான் கண்டனம்

February 16, 20262 Mins Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் 9 மீனவர்கள் உட்பட சிறைபட்ட 11 மீனவச் சொந்தங்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும் 9 தமிழ்நாட்டு மீனவர்களை தாயகம் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழ்நாட்டு மீனவர்களில் 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் கடந்த 03.02.26 அன்று விடுவித்த நிலையில், படகை இயக்கிய 3 மீனவர்களுக்கு மட்டும் 6 மாத கடுங்காவல் தண்டனையும், 11.60 லட்சம் தண்டமும் விதித்ததோடு, தண்டத்தை செலுத்த தவறும் நிலையில் மேலும் 3 மாத காலம் கூடுதல் சிறைதண்டனையும் விதித்த கொடுமையும் அரங்கேறியது.

ஆனால், நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட 9 மீனவச் சொந்தங்களையும் இதுவரை தாயகம் திரும்ப அனுமதிக்காமல் இனவெறி இலங்கை அரசு மிரிஹானா தடுப்பு முகாமில் அடைத்து வைத்து பெருங்கொடுமை புரிந்து வருகிறது. இதனால் சிறைபட்டுள்ள மீனவச் சொந்தங்களின் உறவினர்கள் பெரும் கவலையும், மிகுந்த வேதனையும் அடைந்துள்ளனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 மீனவர்களின் குடும்பத்தினர் ஏழ்மை நிலை காரணமாக தண்டத்தொகை செலுத்த வழியின்றியும் தவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க :  செஸ் ஒலிம்பியாட் : கடலுக்கு அடியில் செஸ் விளையாடி அசத்திய வீரர்கள் !

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படாமல் தடுக்கத்தான் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும், ஒன்றிய – மாநில அரசுகள் இதுவரை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை தாயகம் மீட்கக்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, இனவெறி மிகுந்த இலங்கை அரசின் தடுப்பு முகாமில் வதைபட விடுவது பேரவலமாகும். இது தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மேலும் மேலும் துன்புறுத்தும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

குஜராத், ராஜஸ்தான் மீனவர்கள் என்றால் பதறித்துடிக்கும் பாஜக அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் என்றால் அலட்சியம் செய்வது தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு அன்றி வேறென்ன?. தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் மீனவச்சொந்தங்களை விடுவிக்க, வழக்கம்போல ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டும் எழுதி அமைதிகாப்பது மற்றுமொரு பெருங்கொடுமையாகும். திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகள் முழுவதும் கடிதம் மட்டுமே எழுதியதனால் தமிழக மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன?

இதையும் படிக்க :  போதைப் பொருள் கடத்தல் : எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் காவலர்கள்

இலங்கை அரசால் விதிக்கப்பட்ட தண்டத்தொகையை செலுத்தி மீனவச்சொந்தங்களை மீட்பதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்?. நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட திமுக, தமிழ்நாட்டு மீனவர்களின் நலனைக் காக்க இதுவரை எடுத்த நடவடிக்கைதான் என்ன? ஒன்றுமில்லையே! இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ்நாட்டு மீனவர்களை திமுக அரசு இப்படி ஏமாற்றப்போகிறது? இதுதான் திமுக அரசு தமிழ் நாட்டையும் மக்களையும் காக்கும் முறையா?

ஆகவே, இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் 9 மீனவர்கள் உட்பட, மேலும் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டத்தொகையை அரசே செலுத்தி, சிறையிலிருந்து விடுவித்து, 11 மீனவச்சொந்தங்களையும் விரைந்து தாயகம் மீட்டு, தவித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்திட ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉ.பி.யில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர், நர்ஸ் கைது – தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்
Next Article கடையின் ஷட்டரை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை; கோவை போலீசார் தீவிர விசாரணை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,851 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,141 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,053 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,851 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,141 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,053 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.