சினிமாவெள்ளித்திரை

நிவின் பாலி படத்தில் களமிறங்கும் அனுஷ்கா!

புதிய படம் 

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் 2015ம் ஆண்டு வெளியான இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை கூட்டினார். பின்னர் கடும் உடற்பயிற்சிகள் செய்தும் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் இவர் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இயக்குனர்களும் இவரை நடிக்க வைக்க தயங்கியதாக கூறப்பட்டது. அனுஷ்கா கடைசியாக 2020-ம் ஆண்டு வெளியான நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் நிவின்பாலி நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அனுஷ்காவின் 48-வது படம்.

Related posts