Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு:

சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் 14 வயது சிறுமி இரு மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுக்கத் துப்பில்லாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்தை அடுத்த கீழக்கண்டை கிராமத்தை நோக்கி இரு சக்கர ஊர்தியில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் திங்கள் கிழமை இரவு சென்று கொண்டிருந்த நிலையில், தேவத்தூர் பகுதியில் மது போதையில் இருந்த இரு மனித மிருகங்கள் அவர்களை இரு சக்கர ஊர்தியில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். அதனால் இரு சக்கர ஊர்தியில் சென்ற சிறுவனும், இரு சிறுமிகளும் தவறி விழுந்த நிலையில், அவர்களை இரு மனித மிருகங்களும் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களில் சிறுவனும், ஒரு சிறுமியும் தப்பி ஓடிவிட்ட நிலையில், சிக்கிக் கொண்ட ஒரு சிறுமியை இரு மிருகங்களும் சிதைத்துள்ளனர்.

இதையும் படிக்க :  செஸ் ஒலிம்பிக் விளம்பர பேனர்: தமிழ்நாடு அரசின் தவறை உணர்த்திய அமர் பிரசாத்

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உதவுவதற்கு கூட ஆள் இல்லாமல் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இந்த கொடிய நிகழ்வு தான் சான்று ஆகும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வரிசையில் இந்தக் கொடூரமும் இணைந்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு இது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. நாளொரு விழாவும், பொழுதொரு கொண்டாட்டமாகவும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிக்க :  பொன்னையன் சர்ச்சை ஆடியோ - பொன்னையன் விளக்கம் !

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் தான் கொடூரமான சான்று ஆகும். தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிப்பார்கள்

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்
Next Article தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.