Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, August 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»நெல்லிக்காய் Vs எலுமிச்சை : ஆரோக்கியத்திற்கு தினமும் எது சாப்பிடுவது சிறந்தது?

நெல்லிக்காய் Vs எலுமிச்சை : ஆரோக்கியத்திற்கு தினமும் எது சாப்பிடுவது சிறந்தது?

February 11, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பருவகால மாற்றங்கள், காற்று மாசுபாடு மற்றும் தொற்று நோய்கள் அதிகரிக்கும் காலங்களில், இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற நம்மில் பலரும் நாடுவது நெல்லிக்காய் ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ்.

இவை இரண்டுமே வைட்டமின் சி நிறைந்தவை என்றாலும், எது மிக வேகமாகவும், அதிகப்படியாகவும் பலன் தரும் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. பொதுவாக நமது உணவுமுறையில் நெல்லிக்காயும் எலுமிச்சையும் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வெறும் உணவாக மட்டுமல்லாமல், மருந்தாகவும் பார்க்கப்படுகின்றன.

ஆனால், ஊட்டச்சத்து அடர்த்தி, உடலில் உறிஞ்சப்படும் வேகம் மற்றும் ஆரோக்கிய பலன்களை பொறுத்தவரை இவை இரண்டுக்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. இந்த செய்தியில், நெல்லிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றில் எது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்க உதவும் என்பதை பார்க்கலாம்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை: வைட்டமின் சி அளவு எவ்வளவு? நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டிலும் வைட்டமின் சி இருந்தாலும், அவற்றின் அளவு மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது. இந்திய ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களின்படி, 100 கிராம் நெல்லிக்காயில் 600 முதல் 700 மி.கி வைட்டமின் சி உள்ளது.

இதையும் படிக்க :  முதுகுத்தண்டை பலப்படுத்தும் சேது பந்தாசனம்! - ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

ஆனால், அதே 100 கிராம் எலுமிச்சையில் வெறும் 30 முதல் 40 மி.கி மட்டுமே வைட்டமின் சி உள்ளது. இதிலிருந்து நெல்லிக்காய், எலுமிச்சையை விட பல மடங்கு அதிக ஊட்டச்சத்தைக் கொண்டது என்பது தெளிவாகிறது. நீங்கள் கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சாறுகளை விட, பழங்களிலிருந்து சாறு எடுத்து அருந்துவதுதான் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக மேம்படுத்த உதவும். ஏனெனில், பதப்படுத்தப்பட்ட சாறுகளில் உள்ள சேர்மானங்கள் அதன் சத்தை ஓரளவு குறைத்துவிடும்.

உடலில் சத்துக்கள் உறிஞ்சப்படும் விதம்: நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த சத்தை நம் உடல் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்கிறது என்பதுதான் முக்கியம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மிகவும் நிலைத்தன்மை கொண்டது. இதில் உள்ள ‘பாலிபினால்கள்’ மற்றும் ‘டானின்கள்’ வைட்டமின் சி காற்றில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து வீணாவதைத் தடுக்கின்றன.

இதனால், நெல்லிக்காய் சாறு குடித்த பிறகு நீண்ட நேரம் அந்த சத்து உடலில் தங்கி வேலை செய்கிறது. ஆய்வுகளின்படி எலுமிச்சை சாற்றை விட நெல்லிக்காய் சாற்றில் உள்ள வைட்டமின் சி நீண்ட காலத்திற்குத் தனது வீரியத்தை இழக்காமல் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: நெல்லிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டுமே தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. இருப்பினும், ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான பலனை தருகிறது. உங்களுக்கு அதிகப்படியான வைட்டமின் சி தேவைப்பட்டால், நெல்லிக்காய் சாறுதான் சிறந்த தேர்வு.

இதையும் படிக்க :  நன்மைகளை இரட்டிப்பாக்கும் 8 முளைகட்டிய உணவுகள் - என்னென்ன தெரியுமா?

அதேசமயம், உடலில் நீர்ச்சத்தை (Hydration) பராமரிக்கவும், செரிமானத்தை சீராக்கவும் எலுமிச்சை சாறு சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது ரத்த சோகை உள்ளவர்களுக்கு பயனுள்ளது.

எனவே, உங்கள் தேவை வெறும் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமென்றால் நெல்லிக்காயையும், புத்துணர்ச்சியும் செரிமானமும் வேண்டுமென்றால் எலுமிச்சையையும் தேர்வு செய்யலாம்.

ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள்: அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் அமிலத்தன்மை சிலருக்கு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக இவற்றை குடிக்கும்போது வயிறு எரிச்சல், வயிற்றுப்போக்கு அல்லது பிடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நெல்லிக்காய் ரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை கொண்டதால், ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், ரத்தம் மெலிதாகும் மருந்துகளை (Anticoagulants) எடுப்பவர்களும் மருத்துவர் ஆலோசனை இன்றி நெல்லிக்காய் சாற்றை அதிகம் எடுக்கக்கூடாது.

எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் பற்களின் எனாமலை அரிக்க வாய்ப்புள்ளது, எனவே இதைக் குடித்த பிறகு வாயைச் சுத்தப்படுத்துவது அவசியம். சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களும் அதிக வைட்டமின் சி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article”அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ – முன்னாள் அமைச்சர் தங்கமணி
Next Article புற்றுநோயால் தவித்த மனைவி… கணவர் விபரீத முடிவு

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
ஃபிட்னஸ்

கை நடுக்கம் பிரச்சனை? காரணமாகும் 3 வைட்டமின் குறைபாடுகள்!

March 25, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,836 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,137 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,027 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,836 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,137 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,027 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.