அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.
அதிமுக அலுவலகம்
கடந்த 11ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் அந்த பகுதியில் உள்ள வாகனங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார்கள்.
நீதிமன்ற தீர்ப்பு
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் அதிமுக அலுவலகம் இருக்கும் என்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது.

