இந்தியாதமிழ்நாடு

அக்னிபத் திட்டம் : விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம் !

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டம்

ராணுவத்தில் சேர்வதற்காக ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் அக்னிவீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 4 ஆண்டு முடிவில் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்  வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற போதும் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதுவரை விமானப் படை பணி நியமனத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவே அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்திய விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts