Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 உலக கோப்பை வெற்றி எதிரொலி: ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்

டி20 உலக கோப்பை வெற்றி எதிரொலி: ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்

March 11, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்ததுடன், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

அபிஷேக் முதலிடம்

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிடப்பட்டது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதே சமயம் மற்றொரு இந்திய வீரரான இஷான் கிஷன் இரண்டு இடங்கள் முன்னேறி 871 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதன் காரனமாக பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் இங்கிலாந்தின் பில் சால்ட் ஆகியோர் ஒரு இடம் பின் தங்கி 3 மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளனர். மேற்கொண்டு உலகக் கோப்பை தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறிய இந்திய அணி வீரர் திலக் வர்மா 7ஆவது இடத்திற்கும், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 9ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க :  ”இந்திய அணி மிகவும் ஆபத்தானது” - எம்.எஸ்.தோனி கருத்து

மறுபக்கம் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் அடித்து விளாசிய இங்கிலாந்து வீரர் ஜேக்கக் பெத்தெல் 17 இடங்கள் முன்னேறி 16 ஆம் இடத்தை பிடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்ற சஞ்சு சாம்சன் 18 இடங்கள் முன்னேறி 22 ஆம் இடத்தை பிடித்துள்ளார். கடந்த வாரம் இவர் 40ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தியை பின்னுக்கு தள்ளி ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சோபிக்க தவறியதன் காரணமாக வருண் சக்ரவர்த்தி ஒரு இடம் பின் தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க :  சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களிடம் இருந்த விசில் பறிமுதல்

இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் முன்னேறி 6ஆம் இடத்தை பிடித்துள்ளார். அவர்கள் தவிர்த்து இந்திய அணியின் நட்சத்திர் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் 6 இடங்கள் முன்னேறி 17ஆவது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், அர்ஷ்தீப் சிங் இரண்டு இடங்கள் சரிவை சந்தித்துள்ளார்.

டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரஸா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் சைம் அயுப் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் 3 இடங்கள் முன்னேறி 09ஆம் இடத்தை பிடித்துள்ள நிலையில், ஷிவம் தூபே இரண்டு இடங்கள் பின் தங்கியுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஹார்மூஸ் ஜலசந்தியில் கண்ணி வெடி வைக்க முயற்சி: 16 ஈரான் போர் கப்பல்கள் தகர்ப்பு
Next Article தென்னாப்பிரிக்க தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: அறிமுக வீரர்களுக்கு இடம்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.