புஷ்பா-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
புஷ்பா-2
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா’ ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த இப்படத்தில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
பிரபல நடிகை
இந்நிலையில், புஷ்பா-2 படத்தில் பழங்குடி இன பெண் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியை, படக்குழுவினர் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.