ரிலீஸ் தேதி
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதனைத்தொடர்ந்து மலையாளத்தில் ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருக்கும் படம் ‘கோல்டு’. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘கோல்டு’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Due to work delay on our side “Gold” will be releasing one week after Onam. Please forgive us for the delay caused. Hoping to compensate this delay through our work when “Gold” releases.
– Alphonse Puthren— Alphonse Puthren (@puthrenalphonse) September 1, 2022

