மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் காட்ஃபாதர் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
போஸ்டர்
கடந்த 2019-ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் திரைப்படம் ‘லூசிபர்’. இந்த மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ராஜா லூசிபர் படத்தை ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில், காட்ஃபாதர்’ படத்தில் நடிகை நயன்தாரா, சத்யபிரியா ஜெய்தேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Our Sathyapriya Jaidev of #Godfather pic.twitter.com/kqUY7aVKgl
— Mohan Raja (@jayam_mohanraja) September 8, 2022