அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
அமீர்கான் படம்
1994-ம் ஆண்டு வெளியான ஆங்கில படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் உருவான இப்படம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தை தழுவி தற்போது ஹிந்தி சினிமாவில் உருவாகியிருக்கும் படம் லால் சிங் சத்தா. இத்திரைப்படத்தில் அமீர்கான் கரீனா கபூர், நாக சைத்தன்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். வரும் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் முன்னோட்ட காட்சி போடப்பட்டது. திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
பாராட்டு
அப்போது பேசிய அவர், அன்பு, காதல், மனிதநேயம் அனைத்தையும் இந்த லால் சிங் சத்தா படம் பேசுகிறது. இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான படம். மேலும், நம்மை ஊக்கப்படுத்தும் படமாகவும் லால் சிங் சத்தா என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

