தந்தையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற வழக்கு
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனின் மறைவுக்கு பின் அவரின் சொத்துக்களை அவரது வாரிசுகள் தற்போது அனுபவித்து வருகிறார்கள். சிவாஜி தனது சொத்துக்களுக்கு உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் தங்களுக்கு வரவேண்டிய சொத்துக்களை தராமல் ஏமாற்றிவிட்டதாக, நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோர் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், வாரிசுரிமை சட்டத்தின் கீழ் தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. அதனால் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரி இருந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

