Uncategorizedசினிமாவெள்ளித்திரை

தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனைத்த்தொடர்ந்து விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் விஜய் 50 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், நடிகர்கள் அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தளபதி 67 படத்தில் நடிக்க நவரசநாயகன் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் கார்த்திக் உடல்நிலை காரணமாக படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Related posts