உலகம்சினிமா

மகாராணி எலிசபெத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

இரங்கல் பதிவு 

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ’70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் காலமான செய்தியைக் கேட்டு துயருற்றேன். மேலும், ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts