புதிய அப்டேட்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆர்.சி.15 படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
Versatile actor @iam_SJSuryah joins our stellar cast!
Welcome on board sir @shankarshanmugh @AlwaysRamCharan@advani_kiara @yoursanjali @MusicThaman @DOP_Tirru @ramjowrites @saimadhav_burra @SVC_official #SVC50 #RC15 pic.twitter.com/Az5CQxIeta
— Sri Venkateswara Creations (@SVC_official) September 9, 2022

